ஸ்நாப்டீலை பிளிப்கார்ட்டுக்கு விற்க நெக்ஸஸ் ஒப்புதல்
ஸ்நாப்டீல் நிறுவனத்தை பிளிப்கார்ட்டுக்கு விற்க முதலீட்டு நிறுவனமான நெக்ஸஸ் ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்நாப்டீல் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள நிறுவனம் சாப்ட்பேங்க், அதனால் ஸ்நாப்டீல் நிறுவனத்தை விற்பதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறது.
ஸ்நாப்டீல் நிறுவனர்கள் மற்றும் மற்றொரு முக்கிய முதலீட்டாளரான கலாரி கேபிடல் ஆகியவை கடந்த மாதமே ஒப்புக்கொண்ட நிலையில், நெக்ஸஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்டிருப்பதால் இன்னும் சில வாரங்களில் பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் இணைப்பு நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்நாப்டீல் நிறுவனர்கள் இருவருக்கும் தலா 2.5 கோடி டாலர்கள் கிடைக்கும். அதேபோல நெக்ஸஸ் நிறுவனத்துக்கு 10 கோடி டாலர் மற்றும் கலாரி கேபிடலுக்கு 7 முதல் 8 கோடி டாலர் கிடைக்கும் என தெரிகிறது.
ஸ்நாப்டீல் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் 30 சதவீத பங்குகளும், நெக்ஸஸ் 10% மற்றும் கலாரி 8 சதவீத பங்குகளையும் வைத்திருக்கின்றன.
இந்த இணைப்பு குறித்து இந்த நிறுவனங்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த இணைப்பு இ-காமர்ஸ் துறையில் மிகப்பெரியதாக இருக்கும்.