ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை திடீரென ஒதுக்கும் நாசா!…காரணம் என்ன?
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கஞ்சா புகைத்தபடி பாட்கேஸ்ட் ஒளிபரப்பியதை அடுத்து, அந்நிறுவனத்துடனும், போயிங்குடனும் மேற்கொண்ட திட்டங்களை தொடர்வது பற்றி நாசா மறுபரிசீலனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது தொடர்பாக இரு நிறுவனங்களுடனும் நாசா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கஞ்சா புகைத்தபடியும், விஸ்கி அருந்தியபடியும் பாட்கேஸ்ட் ஒளிபரப்பை மேகொண்டார்.
இதையடுத்து, ஒப்பந்தம் மேற்கொண்ட ஸ்பேஸ் எக்ஸ், போயிங் நிறுவனங்களின் பணியிட கலாச்சாரம் குறித்து மறு ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.