ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்ட தடையை நீக்கி கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்ட தடையை நீக்கி கேரள உயர் நீதிமன்றம் அதிரடி
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு ஐபிஎல் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013-ம் ஆண்டு ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வீரர்கள், சூதாட்ட தரகர்கள் உள்பட மொத்தம் 36 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மூன்று வீரர்களுக்கும் பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கிரிக்கெட் வீரர்கள் மூவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை காவல்துறை சமர்பிக்கவில்லை என தெரிவித்தது மூவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்தது.

எனினும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை பிசிசிஐ நீக்க மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த், என் மீது அன்பு காட்டியதற்கும் ஆதரவாக இருந்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply