பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக பணியாற்றிய ராஜீவ் டோக்ரா என்பவர் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள ஒரு புத்தக்கத்தில் பாகிஸ்தானின் தலைவர்கள் இந்தியாவுக்கு செய்த துரோகங்களை குறித்து விரிவாக எழுதியுள்ளார்.அதே நேரத்தில் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்பிய ஒரே தலைவர் பெனாசிர் புட்டோதான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் டோக்ரா எழுதிய ‘‘Where Borders Bleed: An Insider’s Account of Indopak Relations’’ என்ற புத்தகம் பெரும் பரபரப்பு அடங்கிய விஷயங்களுடன் உள்ளது. இந்த புத்தகத்தில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்பட்ட சில முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ பற்றி இவர் குறிப்பிடுகையில், ‘‘மேற்கத்திய நாட்டில் கல்வி பயின்றதால் வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் பெனாசிர் புட்டோ நடுநிலைமையுடன் செயலாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
பெனாசிர் பிரதமராக இருந்தபோது ராணுவ மேஜர் ஜெனரலாக பணியாற்றிய முஷ்ரப், இந்தியாவுக்குள் ஊடுருவி ஸ்ரீ நகரை அதிரடியாக மீட்கும் திட்டம் குறித்து பெனாசிர் புட்டோவிடம் விளக்கியதாகவும் ஆனால் இந்த திட்டத்தை பெனாசிர் புட்டோ நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெனாசிர் புட்டோ தடுக்காமல் இருந்திருந்தால் கார்கில் போன்ற ஊடுவல் 1999ஆம் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்கும் என அவர் தன்னுடைய புத்தக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒரு கறுப்பு ஆடு என்றும் டெல்லி-லாகூர் பஸ் பயணத்தை தொடங்கி வைத்த போதே அவருக்கு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவியிருந்தது தெரியும் என டோக்ரா குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கடந்த 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலும் முஷாரப்புக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் கராச்சியில் உள்ள பிரான்ஸ் அலுவலக வளாகத்தில் நவாஸ் ஷெரீப் அனுமதியுடன்தான் மும்பை குண்டு வெடிப்பு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது’’ என கூறியுள்ளார்.