ஸ்ரீரங்கம் கோயிலில் இப்படியும் ஒரு சிறப்பு!

ஸ்ரீரங்கம் கோயிலில் இப்படியும் ஒரு சிறப்பு!

srirangam01தமிழகத்திலேயே முதன் முறையாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று பின் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து, கோயிலில் தேவையற்ற மண் மேடுகள் அகற்றப்பட்டு, அனைத்து சன்னிதிகளும் புதுப்பொலிவுடன் காணப்பட்டு வருகிறது. கூடுதல் சிறப்பாக மழை நீர் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் உள்ள மடப்பள்ளிகள், கோசாலை, தாயார் சந்நிதி மற்றும் அனைத்து சந்நிதிகளிலிருந்தும் வெளியேறக்கூடிய கழிவுநீரை, தரையில் புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம் கொண்டு சென்று வசந்த மண்டபத்தின் பின்புறம், 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சேமித்து, பின்னர் 3 முறை வடிகட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தமான தண்ணீராக பிரித்தெடுக்கப்படுகிறது.

பெரிய தொட்டிகளில் உள்ள கழிவுநீர், தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன இயந்திரத்தால் சுத்திகரிக்கப்படுகிறது. இதனையடுத்து சுத்திகரிக்கப்பட்ட நீரானது நந்தவனத்தில் உள்ள மரங்களுக்கும், பூத்துக்குலுங்கும் மலர் செடிகளுக்கும் பாய்ச்சப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றிற்கு 20 முதல் 35 ஆயிரம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை…’ இன்று உலக காற்று தினம்! #WhereIsMyGreenWorld – VIKATAN
இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்வதோடு, கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் அதனை இயற்கை வளங்களுக்கு பயன்படுத்துவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply