ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண்காவலர் அமுதவள்ளி என்பவர் இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே காவலர்கள் தூக்கிடும், துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதால் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply