ஸ்ருதியுடன் அர்ஜூன் சமாதானமா?

ஸ்ருதியுடன் அர்ஜூன் சமாதானமா?

சமீபத்தில் எழுந்த மீடூ குற்றச்சாட்டில் அதிர்ச்சிகரமான ஒன்று ஆக்சன் கிங் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சுமத்திய குற்றச்சாட்டு. இருவரும் இணைந்து நடித்த ‘நிபுணன்’ படப்பிடிப்பின்போது தனக்கு அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி கூறிய குற்றச்சாட்டால் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆக்சன்கிங், ஸ்ருதி மீது வழக்கு தொடரவுள்ளதாகவும் அறிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் அர்ஜூன் மன்னிப்பு கேட்பதே சரியானதாக இருக்கும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கர்நாடாக பிலிம் சேம்பர் நிர்வாகிகள் மத்தியில் ஸ்ருதியிடம் அர்ஜூன் சமாதானம் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த விபரங்களை விரைவில் சேம்பர் வெளியிடும் என தெரிகிறது

அர்ஜூன், ஸ்ருதி, நிபுணன், மீடூ

Leave a Reply