ஸ்வீடன் நாட்டை பின்பற்றுவோம். மத்திய அமைச்சர் நிதிகட்கரி

ஸ்வீடன் நாட்டை பின்பற்றுவோம். மத்திய அமைச்சர் நிதிகட்கரி

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, மெத்தனாலை பயன்படுத்தலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை கூறுகிறார்.

கோவாவில் ஒருங்கிணைந்த கடல் நிர்வாகம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மெத்தனாலை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இனி டீசல் நமக்கு வேண்டாம். ஸ்வீடனிலும் அவ்வாறே பயன்படுத்துகின்றனர்.

இதேபோல் கப்பல்களிலும் புதிய நடைமுறைக்கு உத்தரவிட்டுள்ளோம். உயிர் எரிபொருள் கொண்ட இன்ஜின்கள் தான், இனி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்க ரூ.80 கோடி அளவிற்கு செலவாகிறது.

அதனால் பொது மற்றும் நீர்வழி போக்குவரத்தை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முக்கிய ஆறுகளில் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி கூறினார்.

Leave a Reply