ஹாட்ரிக் வெற்றி பெற்ற லைகா: பெரிய பட்ஜெட் படங்களுக்கு திட்டம்

lyca movies

ஹாட்ரிக் வெற்றி பெற்ற லைகா: பெரிய பட்ஜெட் படங்களுக்கு திட்டம்

lyca moviesஇந்த ஆண்டு லைகா தயாரித்த ‘கோலமாவு கோகிலா’, ‘செக்க சிவந்த வானம்’ மற்றும் ‘2.0’ ஆகிய மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதால் அந்நிறுவனம் உற்சாகத்தில் உள்ளது. எனவே பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே லைகா நிறுவனம் தற்போது சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களை தயாரித்து வரும் நிலையில் இன்னும் ஒருசில பெரிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

குறிப்பாக மணிரத்னம் இயக்கவுள்ள விஜய்,விக்ரம், சிம்பு நடிக்கவுள்ள படத்தை பலகோடி பட்ஜெட்டில் லைகா தயாரிக்கவுள்ளதாம். லைகாவின் வருகை தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply