ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்காக மொய்விருந்த நடத்த அமெரிக்க தமிழர்கள்

ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்காக மொய்விருந்த நடத்த அமெரிக்க தமிழர்கள்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், சீனம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் பெர்சியம் ஆகிய 7 மொழிகள் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் தமிழ் மொழியைத் தவிர மற்ற 6 மொழிகளுக்கும் இந்த பல்கலையில் இருக்கை உள்ளது. எனவே தமிழுக்கும் இருக்கை பெற தமிழ் ஆர்வலர்கள் உலகெங்கும் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டும் முயற்சியில் அமெரிக்கவாழ் தமிழர்கள், மொய்விருந்து நடத்தினர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இந்த மொய் விருந்தை நடத்தினர். மொய் விருந்தில் டல்லாஸ் நகர தமிழ் பெண்கள் ஆளப் போகிறான் தமிழன் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியது அனைவரையும் கவர்ந்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை பெற தேவையான ரூ.30 கோடி நிதி கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply