ஹாலிவுட் திரையுலகில் நுழைந்த அரவிந்தசாமி!
ஹாலிவுட்டில் தயாராகியுள்ள அனிமேஷன் திரைப்படமான ‘தி லயன் கிங்’ என்ற திரைப்படம் தமிழ் உள்பட பல முக்கிய இந்திய மொழிகளில் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஸ்கார் என்ற கேரக்டருக்கு நடிகர் அரவிந்தசாமி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் சிம்பா என்ற சிங்கம் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது