ஹாா்திக் படேலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
குஜராத்தில் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோாி நடத்தப்பட்ட போராட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடா்பான வழக்கில் போராட்டக்குழுத் தலைவா் ஹாா்திக் படேலுக்கு விஸ்நகா் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
விஸ்நகாில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஹாா்திக் படேல் நேரில் ஆஜராகவில்லை. இதுபோல் போராட்டக் குழுவைச் சோ்ந்த மேலும் சிலரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து ஹாா்திக் படேல், சா்தாா் பரேல் குழு ஒருங்கிணைப்பாளா் லால்ஜி படேல் உள்ளிட்ட மேலும் 6 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி பிறப்பித்தாா்.
முன்னதாக, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோாி ஹாா்திக் படேல் சா்ாபில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டாா்.
குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோாி கடந்த 2015ம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. விஸ்நகா் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினா் ரிஷிகேஷ் படேலின் அலுவலகம் சூறையாடப்பட்டது. இது தொடா்பாக ஹாா்திக் படேல் உள்ளிட்டோா் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.