ஹிட்லருடன் தொடர்புடைய சோனியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கியது ஏன்? பாஜக கேள்வி
சமீபத்தில் பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் விமானப் படையில் பணியாற்றியவரின் மகன் அட்னான் சமிக்கு விருது கொடுத்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து மஹாராஷ்டிரா சிறுபான்மையினர் மேம்பாட்டு அமைச்சர் நவாப் மாலிக் கூறியபோது, ‘’2016ல் இந்திய குடியுரிமை பெற்ற அட்னான் சமிக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்கி, 130 கோடி இந்தியர்களை அரசு அவமானப்படுத்தி உள்ளது என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த அவருக்கு பத்மவிருது கொடுத்தது ஏன்? என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா பதிலளிக்கும்போது, ‘பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அட்னான் சமியின் தந்தை, பாகிஸ்தான் விமானப் படையில் பணியாற்றியவர் என்பதால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குறை கூறுகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தந்தைக்கு, இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி மற்றும் ஜெர்மனியின் ஹிட்லருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சோனியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது ஏன் என கேட்கிறேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது