ஹெலிகாப்டரில் சென்ற முதல்வரை வம்புக்கு இழுத்த கமல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். முதல்வர், பிரதமர் போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பணிச்சுமை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுவதே இதுவரை வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஒருசில மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் கமல்ஹாசன். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்… புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?
ஹெலிகாப்டரில் சென்ற முதல்வரை வம்புக்கு இழுத்து கிண்டலடிக்கும் வகையில் இந்த டுவீட் இருப்பதாக நெட்டிசன்கள் கருதி வருகின்றனர்.
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்… புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2018