ஹோம் நர்ஸிங்!

Nurseகேரளாவில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தொடங்கிய ‘கான்செப்ட்’தான் ஹோம் நர்ஸிங். தமிழ்நாட்டில் அந்தப் பயிற்சியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ‘அநியூ’ நிறுவனம்தான். 6 மாதப் பயிற்சியில், 3 மாதங்கள் தியரி பயிற்சியாகவும், மீதி 3 மாதங்கள் சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன், போன் அண்ட் ஜாயின்ட் போன்ற மருத்துவமனைகளில் செய்முறைப் பயிற்சியாகவும் வழங்கப்படுகின்றன.

பயிற்சியின்போது, மாதம் 600 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் மற்றும் முதியவர் நலம் பேணும் பயிற்சியைக் கூடுதலாகப் பெறுவதால், குழந்தைகள் அல்லது வயதானவர்களை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குப் போகும் குடும்பங்களில் இவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கிறது. நல்ல வருமானமும் வருகிறது.

இதுவரை ‘அநியூ’ மையத்தில் 2,136 பெண்கள் ஹோம் நர்ஸிங் பயிற்சி முடித்திருக்கிறார்கள். இப்போது 88-வது பேட்ச் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!

Leave a Reply