10% இட ஒதுக்கீடு: இன்று முதல் குஜராத்தில் நடைமுறைக்கு வருகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு தரும் மசோதா சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து இந்த 10% இடஒதுக்கீடு இன்று முதல் குஜராத் மாநிலத்தில் நடைமுறைக்கு வருகிறது.
அரசியல்சாசன சட்டத் திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து இந்தியாவின் முதல் மாநிலமாக குஜராத்தில் இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் குஜராத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் சதவீதம் 59 புள்ளி 5 ஆக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பின்படி 49 புள்ளி 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.