10 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எனக்கு உள்ளது: தீபாவின் அரசியல் காமெடி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஜெயலலிதா மறைந்த ஒருசில வாரங்களில் பொதுமக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் அவர் ஒரு தெளிவான முடிவை சரியான நேரத்தில் எடுக்காததால் அவருடைய ஆதரவாளர்கள் வெவ்வேறு அணிக்கு மாறிவிட்டனர். தற்போது அவர் பேரவையை நடத்தலாமா? அல்லது கலைத்துவிட்டு ஈபிஎஸ் அணியில் இணைந்துவிடலாமா? என்று ஆலோசனை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, ‘ஜெயலலிதாவின் ஆட்சியை தன்னால் மட்டுமே கொடுக்க முடியும் என்றும், தனித்து நின்றே ஜெயலலிதா ஆட்சியை அமைப்பேன் என்றும் கூறினார். மேலும் தனக்கு பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்த அவர், 18 எம்.எல்.ஏக்களின் நீக்கம் ஜனநாயக படுகொலை என்றும் தெரிவித்தார்.