10 கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு: அமெரிக்கா, கனடா அதிர்ச்சி
அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் வங்கிச் சேவைகளை செய்து வரும் நிறுவனம் கேபிடள் ஒன். இந்த நிறுவனத்தில் இருந்த டேட்டாக்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
கட்நத 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை கிரெடிட் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இதில் அமெரிக்காவை சேர்ந்த 10 கோடி பேர் மற்றும் கனடாவை சேர்ந்த 60 லட்சம் பேரின் விவரங்கள் திருடு போயுள்ளதாகவும் தெரிகிறது
இந்த திருட்டு தகவல் கண்டுபிடிக்கப்பட்டு அதுதொடர்பாக மென்பொறியாளர் பைஜ் தாம்ப்ஸன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனத்தில் இவர் பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது.