10 சதவீத இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேறியது
பொருளாதார நிலையில் பின் குறைந்த முற்பட்ட வகுப்பினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செய்யும் மசோதா மீது நேற்று விவாதம் நடந்து இதுகுறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை நாடாளுமன்றா மக்களவையில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. நாடாளுமன்ற மக்களவையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியதால் இனி அந்த பிரிவினர்களுக்கு சலுகை கிடைக்கவுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற வேண்டுமா? போதுமான ஆதரவு இல்லாத பாஜக மாநிலங்களவையில் எப்படி நிறைவேற்ற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்