10 வகுப்பு முடித்தவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி

10 வகுப்பு முடித்தவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ” தமிழக அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தில் பள்ளிச் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் வரும் மார்ச் 8ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த, 21 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட பெண்கள் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்துக்கும், 5ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த பெண்கள் உதவியாளர் பணியிடத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் நியமன இடத்துக்கும் குடியிருக்கும் வீட்டுக்கும் இடையே 3 கி.மீ தொலைவு மட்டுமே இருக்க வேண்டும். பழங்குடியினர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு வயதிலும், கல்வித் தகுதியிலும் தளர்வு உண்டு.

தகுதியுடையோர் நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவர். விண்ணப்பங்களை dharmapuri.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.”என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply