தமிழகத்தில் சென்னை ஆட்சியர் உள்பட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம்.
தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் பின்வருமாறு: (அடைப்புக்குள் பழைய பதவி):
1. டி.பி. ராஜேஷ் – கரூர் மாவட்ட ஆட்சியர் (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்)
2. சி.கதிரவன் – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் (மதுரை மாநகராட்சி ஆணையர்)
3. என்.நந்தகுமார் – பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்)
4. எஸ்.ஜெயந்தி – திருப்பூர் மாவட்ட ஆட்சியர் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
5. கே.வீர ராகவ ராவ் – மதுரை மாவட்ட ஆட்சியர் (திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்)
6. ஜி.கோவிந்தராஜ் – சென்னை மாவட்டம் (திருப்பூர் மாவட்டம்)
7. எஸ்.நடராஜன் – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர்)
8. சுந்தரவல்லி – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (சென்னை மாவட்ட ஆட்சியர்)
9. எல். சுப்பிரமணியன் – நிதி நிர்வாக இணை ஆணையர் (மதுரை மாவட்ட ஆட்சியர்).
10.விக்ரம் கபூர் – சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலான்மை இயக்குநர் ( சென்னை மாநகராட்சி ஆணையர்)
11. பி.சந்திரமோகன் – சென்னை மாநகராட்சி ஆணையாளர் (சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலான்மை இயக்குநர்)
இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இன்னும் ஓரிரு நாட்களில் தங்கள் புதிய பணியை தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.