பிரேசில்: 400 கிலோ எடையில் பிடிபட்ட 33 அடி நீள அனகொண்டா பாம்பு

பிரேசில்: 400 கிலோ எடையில் பிடிபட்ட 33 அடி நீள அனகொண்டா பாம்பு

1பிரேசில் நாட்டில் டேம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தபோது 400 கிலோ எடையுள்ள மிகப்பெரிய அனகொண்டா டைப் பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. 33 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்டமான பாம்பை மிகப்பெரிய கிரேன் வைத்து பிடித்து அதை சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் அல்டாமிரா என்ற பகுதியில் ‘பெலோ மோண்டி என்ற டேம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த டேம்-இன் அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது திடீரென ஏதோ ஒரு பெரிய நகர்வதை கண்டறிந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து பின்வாங்கினர். பின்னர் மிகப்பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டு தோண்டி பார்த்தபோது 33 அடி பாம்பு ஒன்று பிடிபட்டது.

இதுவரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரிய பாம்பின் நீளம் 25அடிதான் என்று இருக்கும் நிலையில் இந்த பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படுகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக பிடிபட்டவுடன் இந்த பாம்பு இறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2 3

Leave a Reply