பிலிப்பைன்ஸ்: குறி தவறியதால் சொந்த நாட்டு ராணுவ வீரர்கள் 10 பேர் பலி

பிலிப்பைன்ஸ்: குறி தவறியதால் சொந்த நாட்டு ராணுவ வீரர்கள் 10 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவம் நடத்திய வான்வெளி ஒத்திகை தாக்குதலில் எதிர்பாராத விதமாக குறிதவறியதால் சொந்த நாட்டின் 10 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணைக்கு பிலிப்பைன்ஸ் ராணுவ மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களை ஒடுக்குவதற்காக அந்நாட்டு ராணுவம் கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று பல்வேறு ராணுவ நடவடிக்ககளுக்கான ஒத்திகைகள் பார்க்கப்பட்டது.

இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட சிறிய ரக ஏவுகணைகள் துரதிர்ஷ்டவசமாக குறிதவறி சொந்த வீரர்களின் நிலைகளை தாக்கியது. இந்த தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீரர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த மோசமான சம்பவத்திற்கு காரணம் என ராணுவ செயலாளர் டெல்பின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply