உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்வு!!

ஊராட்சி மற்றும் ஒன்றியப் பிரதிநிதிகள் , கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படிகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த அமர்வுப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் ஏப்ரல் 22ம் தேதி அறிவித்தார்

இது குறித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் அமர்வுப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. மற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உயர்த்தப்படவில்லை.