இளைஞர்களுக்கு ஆபாச படம் போட்டு காட்டிய புத்த துறவிக்கு 10 ஆண்டுகள் சிறை

இளைஞர்களுக்கு ஆபாச படம் போட்டு காட்டிய புத்த துறவிக்கு 10 ஆண்டுகள் சிறை

இலங்கையில் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லும் வகையில் அவர்களுக்கு ஆபாச வீடியோ போட்டு காட்டிய பெளத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு அருகே மாளிகாவத்தை என்ற பகுதியில் மாடி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வந்து ஆபாச வீடியோக்களை காட்டி ஆபாசமான முறையில் நடத்துக்கொண்டதாக பௌத்த பிக்கு ஹினட்டிகம சமித என்பவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பௌத்த பிக்கு ஹினட்டிகம சமிதவுக்கு மூன்று ஆண்டுகால சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்குமென உத்தரவிட்டார். அதேபோல் புத்த துறவியுடன் ஆபாச படம் பார்த்த இளைஞர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் இளம் வயதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.

 

 

Leave a Reply