100 கோடி பட்ஜெட் படத்திற்கும், 1 கோடி பட்ஜெட் படத்திற்கும் ஒரே டிக்கெட்டா?

100 கோடி பட்ஜெட் படத்திற்கும், 1 கோடி பட்ஜெட் படத்திற்கும் ஒரே டிக்கெட்டா?

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது இல்லை என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் புலம்பி வருகின்றனர். இதற்கு உண்மையான காரணத்தை அவர்கள் அறிந்து கொள்வதில்லை

பெரிய பட்ஜெட் படங்கள் பிரமாண்டம் மற்றும் விஷுவல் காட்சிகளுக்காக திரையரங்குகளில் 200 ரூபாய் டிக்கெட் கொடுக்கும் பார்வையாளர்கள், சிறிய பட்ஜெட் படத்தில் நல்ல கதை இருந்தாலும் பிரம்மாண்ட மற்றும் விஷுவல் எஃபக்ட் இல்லாததால் அவற்றை திரையில் பார்க்க வேண்டுமென்ற அவசியமில்லை என்று கருதுகின்றனர். இந்த படத்தை டிவி அல்லது செயலியில் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்பதே பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளது.

அது மட்டுமன்றி 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்திற்கும் 200 ரூபாய் டிக்கெட், ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படத்திற்கும் ரூ.200 டிக்கெட் என்பது எந்த வகையில் நியாயம் என்பதே பார்வையாளர்களின் கேள்வியாக இருக்கின்றது

சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கு கட்டணங்கள் குறைக்கப்பட்டால் கண்டிப்பாக அந்த படத்துக்கும் பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருவார்கள். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்கார்ந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதே பார்வையாளர்களின் கோரிக்கையாக உள்ளது

ஒரு திரைப்படத்தை நன்றாக எடுத்தால் மட்டும் போதாது. அது மக்களை சென்றடைய வேண்டும் என்றால் அதற்குரிய கட்டணத்தை பெற வேண்டும்

Leave a Reply