100 விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண் : மொக்கையா போன மத்திய அரசு திட்டம்

100 விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண் : மொக்கையா போன மத்திய அரசு திட்டம்

மகாராஷ்டிராவில் போலி கணக்கின் பேரில் விவசாயக் கடன் தள்ளுபடி பெறுவோரை கண்டறிய முயன்றபோது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் உண்மை வெளியே வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் பயிர்கடன் தள்ளுபடி செய்வதாக அம்மாநில அரசு அறிவித்தது. அதன் படி விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் ஆதார் எண்ணை வைத்து பயனாளிகளின் பட்டியலை மகாராஷ்டிரா கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சரிபார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பட்டியலில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண் வழங்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி பயனாளர்களை ஆதார் எண்ணை வைத்து கண்டுபிடித்து விடலாம் என நினைத்த அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் எண்ணை கண்டுபிடித்ததன் மூலம் தேவேந்திர பட்னாவிஸ் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அண்மையில் பயிர்கடனுக்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் 100 விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது அந்த திட்டத்தின் மீதான தோல்வியே காட்டுகின்றது

Leave a Reply