100 பள்ளி மாணவர்கள் உள்பட 470 பேர் பயணம் செய்த தென்கொரிய கப்பல் ஒன்று கடலில் கவிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்கொரிய நேரப்படி இன்று காலை 8.58 மணிக்கு தென்கொரியாவில் உள்ள peninsula என்ற நகரில் இருந்து 100கி.மீ தூரத்தில் உள்ள ஜெஜு என்று தீவு அருகே 100 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 470 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்த கப்பல் திடீரென மூழ்கத்தொடங்கியது.
தகவல் அறிந்தவுடன் உடனடியாக மீட்புப்படகுகள், ஹெலிகாப்டர்கள், நீச்சல் வீரர்கள் அடங்கிய மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
95%கப்பல் கவிழ்ந்துவிட்டதாகவும், அந்த கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி வருவதாகவும் கூறப்படுகிறாது.
இந்த விபத்தில் 27 வயதுள்ள ஒரு பெண்ணும், ஒரு பள்ளி மாணவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மரணம் அடைந்த பெண்ணின் பெயர் Park Ji-yeong என்றும் பள்ளி மாணவரின் பெயர் Jeong Cha Woong என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 100 பேர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
விபத்தின் காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.