நியுசிலாந்து கடற்கரையில் திடீரென கரையொதுங்கிய 200 திமிங்கலங்கள். பெரும் பரபரப்பு.

whalesநியூசிலாந்து நாட்டின் பேர்வெல் ஸ்பிட்டில் என்ற பகுதியில் உள்ள புகழ்பெற்ற  கோல்டன் பே கடற்கரையில் நேற்று திடீரென 200 திமிங்கிலங்கள் நேற்று கரை ஒதுங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திமிங்கலங்கள் அனைத்தும் பைலட்’ ரகத்தை சேர்ந்தவை என கூறப்படுகிறது. திமிங்கலங்கள் கரையொதுங்கிய  தகவலறிந்ததும் கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கடற்கரை பகுதிக்கு விரைந்து வந்து அந்த திமிங்கிலங்களை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த முயற்சி பலனளிக்காமல் 100 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் தெரியவில்லை இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பைலட்’ ரக திமிங்கிலங்கள் 20 அடி வரை நீளமாக வளரக் கூடியவை. இவை நியூசிலாந்து கடல் பகுதியில் அதிக அளவு உயிர் வாழ்கின்றன. இதுபோன்று திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1DqD3Kj” standard=”http://www.youtube.com/v/SDrU4WJvLH0?fs=1″ vars=”ytid=SDrU4WJvLH0&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8886″ /]

Leave a Reply