மத்திய அரசு ஊழியர்களுக்கு 100% அகவிலைப்படி. அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கு நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களை ஓட்டு வங்கியாக மாற்ற பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

இதுவரை மத்திய அரசு ஊழியர்கள் 90% மட்டுமே அகவிலைப்படி பெற்று வந்தனர். அதை தற்போது 100% ஆக உயர்த்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சலுகைகளை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும்.

இந்த புதிய சலுகையால் 50 லட்சம் தொழிலாளர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். இதுதவிர வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 1000 வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply