சீனா: 599 அடி உயர கண்ணாடி தொங்கு பாலத்தில் யோகா செய்த 100 இளம்பெண்கள்
[carousel ids=”75335,75334,75333,75331,75330,75329,75328″]
சீனாவில் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக சமீபத்தில் கண்ணாடியினால் ஆன தொங்குபாலம் கட்டி திறக்கப்பட்டது. இந்த பாலம் பூமியிலிருந்து 599 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கண்ணாடியினால் இந்த பாலம் உருவாக்கப்பட்டதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் த்ரில்லான அனுபவங்களை பெறுகின்றனர்.
இந்நிலையில் இந்த பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதை சரிசெய்யும் முயற்சியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். தற்போது இந்த பாலம் முழுவதும் சரிசெய்யபப்ட்டாலும், சுற்றுலா பயணிகளுக்கு சந்தேகம் இருப்பதாக தோன்றியதால் கூட்டம் பெரிதாக வரவில்லை.
எனவே சுற்றுலாப் பயணிகளின் பயத்தை போக்க இந்த பாலத்தின் நடுவில் சுமார் 100 பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். பல சுற்றூலா பயணிகள் நடப்பதற்கே அஞ்சும் இந்த பாலத்தின் மீது 100 இளம் பெண்கள் பயம் இல்லாமல், யோகா செய்து அசத்தியது அனைவரையும் கவர்ந்தது. 100 பெண்கள் ஒரே நேரத்தில் உட்கார்ந்து யோகா செய்தும், பாலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாததால், தற்போது சுற்றுலா பயணிகள் மீண்டும் இந்த பாலத்தில் குவியத்தொடங்கியுள்ளனர்.