1000 பேர் மாயம்: உயிருடன் புதைந்திருக்க வாய்ப்பு என அச்சம்
இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பம் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி ஆகியவற்றால் சுமார் 800க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக ஏற்கனவே அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது சுமார் 100 பேர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது.
காணாமல் போன ஆயிரம் பேர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியாததால் அவர்கள் பூகம்பத்தின்போது உயிருடன் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் சுனாமி தாக்குதலில் பலு நகரம் முற்றிலும் அழிந்த நிலையில் இந்த நகரை சீரமைக்க 6 மாதம் முதல் ஒருவருடம் வரை ஆகலாம் என இந்தோனேசிய துணை அதிபர் ஜுசுப்கல்லா தெரிவித்தார். அதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.