பெரு நாட்டின் தலைநகர் லிமாவின் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் பழங்கால கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 1981ம் ஆண்டில் இருந்து அகழ்வாராய்ச்சி பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள பல கல்லறைகளை தோண்டி ஆய்வு நடத்துகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கல்லறைக்குள் 2 மம்மிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவர் பெரியவர் உடல் மற்றொன்று ஒரு குழந்தையின் உடலாகும்.
அவை 1000 ஆண்டுக்கு முந்தைய பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. அவை இரண்டும் குந்தி உட்கார்ந்த நிலையில் உள்ளன. பெரியவர் இறந்த பின்னர் குழந்தையை கடவுளுக்கு பலி கொடுத்து புதைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.