போரில் தப்பித்த விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசியா? இலங்கை ராணுவ அமைச்சர் விளக்கம்

போரில் தப்பித்த விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசியா? இலங்கை ராணுவ அமைச்சர் விளக்கம்

ltteகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடும்போர் நடைபெற்றது. இந்த போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்த தமிழகர்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் போரில் இருந்து தப்பிய விடுதலைப்புலிகள் சிலர் இருந்ததாக ராணுவத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் இனங்கானப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் அனைவருக்கும் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதாகவும் ஒருசில இதில் மரணம் அடையாமல் நோயினால் தாக்கப்பட்டு இன்னும் உயிர் வாழ்ந்து வருவதாகவும் இலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன், ‘இலங்கை அரசின் மறுவாழ்வு முகாம்கள் அல்லது காவலில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதால் அவர்கள் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே தற்போது இலங்கையின் வடக்கு பகுதியில் முகாமிட்டு இருக்கும் அமெரிக்க விமானப்படையின் மருத்துவ குழுவினர் அவர்களுடைய உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை ராணுவ அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே, “இலங்கையின் வட பகுதியில் வசிக்கும் தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல்வாதிகள் சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இலங்கை அரசின் அனுமதி பெற்று, சர்வதேச சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் மறுவாழ்வு முகாம்களுக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply