சட்ட உதவியுடன் தற்கொலை செய்து கொண்ட விஞ்ஞானி

சட்ட உதவியுடன் தற்கொலை செய்து கொண்ட விஞ்ஞானி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 104 வயது விஞ்ஞானி ஒருவரின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமடைந்து வந்ததால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து அதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய அரசிடம் கேட்டார். ஆனால் அரசு அவருக்கு அனுமதி தரவில்லை. இதனால் தற்கொலையை அனுமதிக்கு சுவிட்சர்லாந்துக்கு அவர் சென்று அந்நாட்டில் தற்கொலைக்கு அனுமதி கேட்டார்.

அந்த நாடும் அவருக்கு அனுமதி வழங்கவே அங்கு அவரது உயிர் பிரிந்தது. இந்த தற்கொலை சுவிசில் உள்ள எக்சிட் என்ற நிறுவனம் உதவி செய்தது நேற்று காலையில் விஷ ஊசி செலுத்தி மரணம் விளைவிக்கப்பட்டதால் அவர் அமைதியாக மரணித்ததாக எக்சிட் அமைப்பின் நிறுவனர் பிலிக் நிட்ஸ்கி கூறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் குட்ஆல், தனது வாழ்வை முடித்துக்கொள்ள ஆர்வமாய் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவிலேயே இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறினார். இனி மேலாவது இத்தகைய நடவடிக்கைக்கு அனுமதிப்பது குறித்து ஆஸ்திரேலியாவும், பிற நாடுகளும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply