105 வயதில் கின்னஸ் சாதனை செய்த ஜப்பான் முதியவர்
[carousel ids=”72348,72349,72350,72351″]
ஜப்பானை சேர்ந்த 105 வயது முதியவர் 100 மீட்டர் தூரத்தை 42.22 வினாடிகளில் கடந்து சாதனை செய்துள்ளார். இந்த நேரம் உலக சாதனை செய்த ஹூசைன் போல்ட் ஓடிய நேரத்தை விட 32.64 வினாடிகளே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 100 வயதுக்கும் மேற்பட்டவர்களில் இதுவரை யாரும் 100 மீட்டர் தூரத்தை இவ்வளவு குறுகிய நேரத்தில் கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த Hidekichi Miyazaki என்ற 105 வயது முதியவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர். இவரை முதியவர் என்று சொல்வதைவிட இளைஞர் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். இத்தனை வயதிலும் அவர் எந்தவித நோய்நொடியும் இன்றி ஆரோக்கியமாக உள்ளார்.
Hidekichi Miyazaki அவர்கள் இந்த சாதனையை தனது 105வது பிறந்த நாளில் ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 80வயதுக்கு மேற்பட்டவர்களில் மிக அதிக வேகத்தில் ஓடியவர் என்ற கின்னஸ் சாதனையும் அவரது பிறந்த நாளில் கிடைத்தது மேலும் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 105வது வயதில் கின்னஸ் சாதனை புரிந்த Hidekichi Miyazaki அவர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.