உள்ளாட்சி தேர்தல். எங்கும் எதிலும் பெண்கள் மயம்

உள்ளாட்சி தேர்தல். எங்கும் எதிலும் பெண்கள் மயம்

mayorதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதமாக செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் திருப்பூர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியினை பார்த்தோம். தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 108 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில்

ஆதிதிராவிடர் பொதுப் பிரிவு – 16 வார்டுகள்
ஆதிதிராவிடர் பெண்கள் – 16 வார்டுகள்
பெண்கள் பொதுப் பிரிவு – 92 வார்டுகள்
பொதுப் பிரிவு – 76 வார்டுகள்

இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கும், திருப்பூர் மாநகராட்சி ஆதிதிராவிடர் பெண் மற்றும் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை மாநகராட்சிகள் பெண்கள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை, சேலம், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாநகராட்சிகளும் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply