அடுத்த ஆண்டும் 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு தொடரும். அரசு உத்தரவு

7அடுத்த கல்வியாண்டில் (2014-15) 10ஆம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
2012-2013ஆம் ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதோடு, கல்லூரிகளில் இருப்பது போன்று செமஸ்டர் முறையை பின்பற்றினால், பின்னாளில் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எளிதாக கல்வி கற்க முடியும் என்பதால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த செமஸ்டர் முறை கல்வியை பத்தாம் வகுப்பிலும் புகுத்தி, பொதுத்தேர்வை ரத்து செய்ய பல கல்விநிலையங்களின் தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே 10ஆம் வகுப்பை பொருத்தமட்டில் தற்போதைய கல்வி நிலை தொடரும் என்றும், அடுத்த ஆண்டும் பொதுத்தேர்வு நடக்கும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாடங்களும் 10ஆம் வகுப்பிற்கு மாற்றப்படாது என்றும் தற்போதைய பாடபுத்தகங்களை அச்சடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply