ஹால் டிக்கெட் வாங்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்

 அதிர்ச்சி தகவல்

நெல்லை அருகே ஹால்ல் டிக்கெட் வாங்க 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது மாமாவுடன் டூவீலரில் சென்ற நிலையில் அந்த டூவீலர் விபத்துக்குள்ளாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மாவட்டம் சிங்கநேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த காவ்யா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது ஹால் டிக்கெட்டை வாங்குவதற்காக தனது மாமா கண்ணனின் டூவீலரில் சென்றுள்ளார்

அப்போது கண்ணனின் மகன் மற்றும் அவரது அண்ணன் மகள் ஆகிய இருவரும் வருவதாக அடம் பிடித்ததால் நால்வரும் ஒரே டூவீலரில் ஹால் டிக்கெட் வாங்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் செல்லும் வழியில் திடீரென எதிர்பாராத வகையில் ஒரு கார் பைக் மீது மோதியதால் அந்த டூவீலரில் இருந்த நால்வரும் தூக்கி வீசப்பட்டனர்

இதில் பைக்கை ஓட்டிச் சென்ற கண்ணன் மற்றும் அவரது அண்ணன் மகள் ஆகிய இருவரும் பலியாயினர். ஹால் டிக்கெட் வாங்கச் சென்ற காவ்யா மற்றும் கண்ணனின் அண்ணன் மகள் ஆகிய இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply