11ஆம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை கொடுத்த கல்லூரி மாணவன் கைது!

11ஆம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை கொடுத்த கல்லூரி மாணவன் கைது!

11ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் கர்ப்பத்தை கலைப்பதற்காக கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்

ராசிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் வசந்த் என்பவர் அதே பகுதியில் உள்ள 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்கள் இருவரும் எல்லை மீறியதன் விளைவாக 11ஆம் வகுப்பு மாணவி திடீரென கர்ப்பமானார்

மாணவி கர்ப்பமான தகவல் அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த மாணவர் வசந்த் தனது காதலிக்கு கருக்கலைப்பு மாத்திரை ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவியின் உடல் மோசம் அடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் வசந்த் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வசந்தை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply