கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியா? அதிர்ச்சியில் முதல்வர் குமாரசாமி?

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியா? அதிர்ச்சியில் முதல்வர் குமாரசாமி?

கர்நாடக மாநிலத்தில் வெறும் 38 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஆட்சி நட்ந்து கொண்டிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக செய்திக்டள் கூறப்படுவதால் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி கடந்த 23-ந் தேதி பதவி ஏற்ற்று அதனை தொடர்ந்து கடந்த 25-ந் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தனாது பெரும்பான்மையை நிரூபித்தார்.

ஆனாலும் மந்திரிசபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. முதல்-மந்திரி பதவி உள்பட மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகள் காங்கிரசும், 12 மந்திரி பதவிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்துகொண்டன. ஆனால் இலாகாக்களை பகிர்ந்துகொள்வதில் இருகட்சிகள் இடையே இழுபறி ஏற்பட்டு வருவதால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காவிட்டால், கட்சியை விட்டு விலகுவதாக சில எம்.எல்.ஏ.க்கள் மிரட்டி வருவதாகவும், பா.ஜனதாவில் சேர காங்கிரசை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி குமாரசாமியிடம் மாநில உளவுத்துறை அறிக்கை வழங்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மந்திரி பதவி கிடைக்காதா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு தனியாக உருவாகி பாஜகவை ஆதரித்தால் மீண்டும் பாஜக ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply