பாஜக, காங் உள்பட 11 கட்சிகள் போட்டியிட மறுப்பு: நாகலாந்தில் பரபரப்பு
நாகலாந்து மாநிலத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
ஆனால் பாஜக, காங்கிரஸ் உள்பட 11 அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும், இந்த தேர்தலில் தாங்கள் வேட்பாளர்களை நிறுத்த போவதில்லை என்றும் அறிவித்துள்ளன,.
நாகலாந்து மாநிலத்தின் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் வன்முறையை நீக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைதியான நாகலாந்தில் மட்டுமே தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அந்த கட்சிகள் அறிவித்துள்ளன.
11 கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் தேர்தல் நிறுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது