எகிப்து நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு இடையே நடந்த வன்முறையில் 72 பேர் பலியாகினர். மேலும் 500 பேர் பலியாகினர்.
இந்த வன்முறைக்கு காரணமான 11 பேர்களின் மீது எகிப்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக எகிப்து தலைநகர் கெய்ரோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்களுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகளில் ஒருவர் மட்டும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை பிடிக்கும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
11 பேர்களுக்கு மரண தண்டனை அளித்த தீர்ப்பு அந்த நாட்டின் ‘கிராண்ட் முப்தி’ அமைப்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த அமைப்பின் ஒப்புதல் கிடைத்த பின்னர் ஒரே நாளில் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.