உலக வரைபடத்தை துல்லியமாக வரைந்த ஆட்டிஸம் பாதித்த 11 வயது சிறுவன்.

autismகடந்த 2ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ஆட்டிஸம் தினம் (world autism day) அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் 11 வயது ஆட்டிஸம் பாதித்த சிறுவன் ஒருவன் உலக வரைபடத்தை மிகத்தெளிவாக வரைந்து சாதனை புரிந்துள்ளான்.

நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தன்னிடம் பயிற்சி பெறும் ஆட்டிஸம் பாதித்த சிறுவன் ஒருவனை உலக ஆட்டிஸம் தின நிகழ்ச்சிக்காக அழைத்து வந்தார். அந்த சிறுவன் அங்கிருந்த கரும்பலகை ஒன்றில் உலக வரைபடத்தை மிகச்சரியாகவும், தெளிவாகவும் வரைந்தான். அது மட்டுமின்றி ஒவ்வொரு நாட்டின் எல்லைகள் மற்றும் அந்தந்த நாட்டின் பெயர்களை எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.

இந்த வரைபடத்தில் உலகின் மூலை முடுக்கில் உள்ள சிறிய தீவுகள் முதற்கொண்டு அந்த சிறுவன் மிகவும் துல்லியமாக வரைந்ததை பார்த்து, அந்த சிறுவனின் ஞாபக சக்தியை அனைவரும் பாராட்டினர்.  இந்த சிறுவன் வரைந்த உலக வரைபடத்தின் புகைப்படங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், ரெடிட் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளிவந்த அந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

autism 2

Leave a Reply