அஸ்ஸாம் தேர்தல்: 126 தொகுதிகளில் 112 கோடீஸ்வர வேட்பாளர்கள்

அஸ்ஸாம் தேர்தல்: 126 தொகுதிகளில் 112 கோடீஸ்வர வேட்பாளர்கள்
assam
தமிழகத்தை போலவே அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக நேருக்கு நேர் மோதுகிறது. இங்கு மொத்தம் 126 தொகுதிகள் உள்ளது. இவற்றில் 65 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4ஆம் தேதியும் மீதி தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த மாநிலத்தில் 126 தொகுதிகளில் 112 கோடீஸ்வர வேட்பாளத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காங்கிரஸ்  வேட்பாளர்களில் 36 கோடீஸ்வரர்களும், பாஜக வேட்பாளர்களில் 23 கோடீஸ்வரர்களும் களத்தில் இருப்பதாகவும், அசாம் கனபரிஷத் கட்சி சார்பில் 7 கோடீஸ்வரர்களும் தேசியவாத காங்கிரஸ், போடோலாந்து மக்கள் முன்னணி (பிபீஎப்) ஆகியவை சார்பில் தலா 2 கோடீஸ்வரர்களும் களத்தில் உள்ளனர். மேலும் அரசியல் கட்சியை சாராத சுயேச்சை வேட்பாளர்களில் 26 பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டே இரண்டு வேட்பாளர்களுக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லையாம். அவர்களில் ஒருவர் இடதுசாரி கட்சி வேட்பாளர் மற்றாவர் சுயேச்சை வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply