தினமும் 30 சிகரெட்டுக்கள் புகைக்கும் 112 வயது முதிய பெண்மணி

தினமும் 30 சிகரெட்டுக்கள் புகைக்கும் 112 வயது முதிய பெண்மணி
nepal
புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் புகை பிடித்தால் புற்று நோய் வரும் என்றும் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் விளம்பரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் 112 வயது பெண் ஒருவர் தனது நீண்ட நாள் வாழ்விற்கும் புத்துணர்ச்சிக்கும் காரணம் தன்னுடைய புகைப்பழக்கத்தால்தான் என்று அதிர்ச்சி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் வாழும் Batuli Lamichhane என்ற பெயரை உடைய 112 வயது பெண்மணி கடந்த 1903 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 17 வயதில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை தொடங்கியதாக கூறும் இவர் கிட்டத்தட்ட நூறு வருடங்களாக தினமும் 30 சிகரெட்டுக்களை புகைப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கடையில் சிகரெட் வாங்குவது இல்லை. அவர் வீட்டருகே கிடைக்கும் புகையிலையை கொண்டு அவராகவே சிகரெட் செய்து அதை புகைப்பாராம்.

தன்னுடைய புத்துணர்ச்சிக்கும் நீண்ட வாழ்நாளிற்கும் புகைப்பழக்கமே காரணம் என்று கூறியுள்ள இவருடைய மூத்த மகனுக்கு 85 வயது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் புகைபிடித்தால் மனது லேசாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதைத்தான் நம்மூரில் ‘புண்பட்ட மனதை புகைவிட்டு போக்கு’ என்று கூறுகின்றார்களோ?

nepal 1 nepal 2 nepal 4 nepal 5 nepal 6 nepal 7

Leave a Reply