சீன பல்கலையின் 115வது ஆண்டுவிழாவில் 115 ஜோடிகள் திருமணம்
சீனாவில் உள்ள பழம்பெரும் பல்கலைகழகமான நாஞ்சிங் பல்கலைகழகம் சமிபத்தில் 115வது ஆண்டுவிழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடியது. இந்த தினத்தில் இதே பல்கலையில் படித்த 115 ஜோடிகள் ஒரே இடத்தில் கூடி திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் பழைய மாணவர்கள் ஜோடி 57, அலுவலக நிர்வாகிகள் ஜோடி 6 மற்றும் 52 ஜோடிகள் தற்போது இந்த பல்கலையில் படித்து கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே இடத்தில் அனைத்து ஜோடிகளும் ஒரே வெள்ளை நிற உடை அணிந்து ஒரே நேரத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி காண்போர் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த திருமணத்தின் செலவு அனைத்தையும் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1902ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சீனாவின் பழம்பெரும் பல்கலையில் ஒன்று. இந்த பல்கலைக்கழகத்தில் சீனாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.