12வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை
அஞ்சல் துறை சேவைகளான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கான நேர்காணல் தேதி மற்றும் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை சேவைகளான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கான நேர்காணல் 15.07.2017 அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அல்லது பத்தாம் வகுப்பு/ டிப்ளோமா கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 18 லிருந்து 65 வரை. அஞ்சல் அலுவகத்தில் தொடர் வைப்புத்தொகை முகவர்களாக இருக்க வேண்டும்.
வேலையில்லா, சுயதொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் ஆயுள் காப்பீட்டு குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ஏதேனும் காப்பீட்டு குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முன்னால் ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம்.
தொழில் செய்ய விரும்பும் அஞ்சல் துறை ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதரர்கள் சென்னை நகரம், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் செங்கல்பட்டில் வசிப்பவராக வேண்டும்.இந்தப் பணிக்கான நேர்காணலை அஞ்சல் துறை, தலைமை அஞ்சல் அலுவலர், சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின்போது தங்கள் கல்வி தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடர்பான சான்றிதழ்கள் / ஆவங்களுடன் இரண்டு புகைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும். தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அஞ்சல் துறைக்கு ரூ. 250 உரிமத் தொகை வழங்கவேண்டும்