12 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் என்ன ஆகும்? கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகத்தில் நடைபெற்று வரும் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 12 பேர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்.எல்.ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 எம்,.எல்.ஏக்களும் பிஎஸ்பி கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏவும் உள்ளனர்.
மெஜாரிட்டிக்கு 113 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில் குமாரசாமியை 118 பேர் ஆதரித்து வருகின்றனர். இதில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டால் மொத்தமுள்ள 212 எம்.எல்.ஏக்களில் 107 பேர் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரஸ்+மதஜ+பிஎஸ்பி ஆகியவை இணைந்து சரியாக 106 பேர் மட்டும் இருக்கும் என்பதால் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது.