பொம்மை துப்பாக்கியை வைத்து விளையாடிய 12 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்.

12 year old boyஅமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை வைத்து விளையாடிய 12 வயது சிறுவன், உண்மையான துப்பாக்கியை வைத்திருப்பதாக தவறாக கருதிய அமெரிக்க போலீஸார் அந்த சிருவனை சுட்டுக்கொன்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கிளீவ்லாந்தில் 12 வயது சிறுவன் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான், அவனிடம் இருந்த பொம்மை துப்பாக்கியால் நண்பர்களை சுட்டுவிடுவது போல் விளையாட்டாக மிரட்டிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த போலீஸ் அதிகாரி அந்த போலி துப்பாக்கியை தரும்படி சிறுவனிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் துப்பாக்கியை தர மறுத்ததையடுத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுள்ளதாவது, போலீசார் துப்பாக்கியை அவனிடம் தரும்படி கேட்டுள்ளனர். பின்னர் கையை மேலே தூக்கி நிற்க சொல்லியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு சிறுவன் மறுத்ததால், தவறுதலாக போலீஸ் அதிகாரி அவனை சுட நேரிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய அந்த சிறுவனின் குடும்ப வழக்கறிஞர் :  சனிக்கிழமையன்று பூங்காவிற்கு தனது நண்பர்களுடன் விளையாட சென்ற  சிறுவன், அங்கு நடப்பது என்னவென்று அறியாமல் துப்பாக்கியை எடுத்து விளையாடியதாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply